சனி, 31 ஆகஸ்ட், 2019

டிப்தீரியா - மீண்டும் வருகிறதா ஆபத்து?


அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக்

கேரளாவின் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்னிரெண்டு வயது சிறுவன் அமீருதீன் தீவிரமான தொண்டை வலி மற்றும் இருமலோடு சில மாதங்களுக்கு முன்பு அட்மிட் செய்யப்பட்டான். அவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறுவனின் நோய் அறிகுறிகள் டிப்தீரியா போல காணப்படுவதாக சந்தேகித்தார்கள். இன்னும் சில நாட்களில் டிப்தீரியாவின் அறிகுறிகளும், சிறுவனின் அறிகுறிகளும் ஒத்துப் போயின. திவிர சிகிச்சைக்குப் பின்பு சிறுவன் அமீருதீன் மரணமடைந்தான்.

டிப்தீரியாவைத் தடுக்கும் என்று அரசு சார்பில் போடப்படுகிற தடுப்பூசி அச்சிறுவனுக்கு போடப்படாததே அவன் மரணத்துக்குக் காரணம் என்ற விவாதம் அப்போதே கேரளாவில் துவங்கிவிட்டது. பசியாலும், போதிய கவனிப்பின்மையாலும், பாலியல் வன்முறைகளாலும் பலர் மரணமடையும் நம் நாட்டில் – ஒரே ஒரு சிறுவனின் மரணம் ஏன் இவ்வளவு பெரியதாக இந்தியா முழுவதும் பேசப்படும் விஷயமாக மாறியது?

உலக சுகாதார நிறுவனம் , உலக வங்கி உட்பட பல்வேறு உலக அமைப்புகள் நம் நாட்டின் குழந்தை நலத்திற்காக மில்லியன் கணக்கில் நிதி உதவியும், கடன் உதவியும் அளித்துள்ளன. சிறிய நகரங்களில் கூட “தாய் சேய் நல மருத்துவமனைகள்” உலக வங்கியின் நிதியோடு இயங்குவதை நீங்கள் பார்த்திருக்க முடியும். அரசு மருத்துவமனையில் ஒரு சிறுவன், அதிலும் இந்தியாவிலேயே இல்லாததாக நம்பப்படும் நோயான டிப்தீரிய அறிகுறிகளோடு மரணமடைவது உலக அளவிலான கவனத்திற்குச் செல்வதற்கு அதன் பின்னால் இருக்கிற நிதியும், தடுப்பூசிக்காக நம் நாடு பெறுகிற உதவிகளும் தான் காரணம்.

உலக அளவில் பேசப்பட்டாலும் சரி, உள்ளூரிலேயே பேசப்பட்டாலும் சரி. . கேரளாவின் டிப்தீய பிரச்சினையின் உண்மை நிலை என்ன?

சென்ற ஆண்டிலேயே பத்து நபர்கள் டிப்தீரிய அறிகுறிகளோடு கேரள மருத்துவமனைகளுக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால், அதில் மூவருக்கு மட்டும் டிப்தீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்ட நோயாக அறிவிக்கப்பட்ட டிப்தீரியா மறுபடி வருவதுதான் இப்போதைய சர்ச்சைக்கு பிரதான காரணம்.

கேரள ஊடகங்களும், அரசு நிர்வாகமும் தடுப்பூசியை முழுமையாகப் பயன்படுத்தாததே டிப்தீரியாவின் மறுவருகைக்கான காரணம் என்று சொல்கின்றன. கேரள மக்களின் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தால் தான் தடுப்பூசிகள் போடப்படுவதில்லை என்றும் ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.

கேரளாவில் ஐந்து வயதிலிருந்து பத்து வயது வரையுள்ள குழந்தைகளில் மூன்று பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வதில்லை என்பது இப்பிரச்சினையின் போது வெளிப்பட்ட அரசின் தகவல். கேரள குழந்தைகளில் 36% பேர் எந்த விதமான தடுப்பு மருந்துகளும் எடுத்துக் கொள்வதில்லை. சமீபத்திய அதிகாரப் பூர்வமான தரவின் படி மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் 3,42,657 குழந்தைகளில் 23, 912 குழந்தைகள் எந்த விதமான தடுப்பு மருந்துகளையும் எடுத்துக் கொள்ளவில்லை.

பிரச்சினைக்கான காரணங்களை அரசு ஆராய்ந்து அலசிக் கொண்டிருக்கும் போது செய்திகளில் வெளியான ஒரு ஆசிரியரின் பேட்டி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மலப்புரம் மாவட்டம் திரூரில் உள்ள மத்ரசாவில் ஆசிரியராகப் பணியாற்றும் அப்துல் ரஹ்மான் “எனக்கு மருத்துவர்களை விட அல்லாவிடமே அதிக நம்பிக்கை இருக்கிறது. கடவுளை விட மருத்துவரை நாம் நம்பினால், அது துரோகம்” என்று கூறியுள்ளார்.

கேரளாவின் தடுப்பூசி எதிர்ப்பிற்கான காரணம் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற கண்ணோட்ட்த்தில் பிரச்சினை திசை திரும்பியது. கேரளாவில் இரு இஸ்லாமிய அமைப்புகளின் குடும்பங்களில் தடுப்பூசி மறுக்கப்படுவதாக செய்தி பரவியது. ஒருபிரிவினர் கந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் முஸ்லியர் தலைமையில் இயங்கும் சன்னி முஸ்லிம் பிரிவு. இன்னொரு அமைப்பு – ஜமாத் இ இஸ்லாமி என்று கூறப்பட்டது.

நோய்த்தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வது குறித்து தாங்களோ, தங்களது அமைப்போ எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், அப்படியான கொள்கை முடிவுகள் எதுவும் தங்கள் அமைப்புகளுக்கு இல்லை என்று மேற்குறிப்பிட்ட இரு அமைப்புகளுமே மறுத்துள்ளன.

 இந்த ஆண்டும் 12 குழந்தைகள் கோழிகோடு மருத்துவமனையில் டிப்தீர்யா அறிகுறிகளோடு அனுமதிக்கப்படிருக்கிறார்கள்.

உண்மையில் டிப்தீரியா என்பது என்ன? அதற்கான தடுப்பூசிகள் குறித்து மாற்றுக் கருத்துகள் இருக்கின்றனவா?

கம்மிய குரலில் அழுவது என்று பொருள் படும் Croup என்ற சொல்லால பதினெட்டாம் நூற்றாண்டில் இந்நோய் அழைக்கப்பட்டு வந்தது. ஸ்காட்லாந்தில் 18 ஆம் நூற்றாண்டிலேயே இச்சொல்லை டிப்தீரிய அறிகுறிகளைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பண்டைய கிரேக்கத்திலும் இவகை தொண்டைக்கட்டு இருந்ததாக குறிப்புகள் கூறுகின்றன.

தொண்டைச் சவ்வு பாதிக்கப்பட்டு, குரல் மாறுபாடு ஏற்படுவதும், தொடர் இருமலும் இதன் பிரதான அறிகுறிகள். அதிலும், இருமலின் சப்தம் குரைப்பது போன்று இருக்கும் என்பது இதன் சிறப்பு அறிகுறி. மூக்குச் சவ்வு பாதிப்பு, நுரையீரல் அழற்சி மற்றும் காய்ச்சல் போன்றவை டிப்தீரியாவின் பிற அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

பாக்டீரியா மூலம் பரவுவதாக நம்பப்படும் டிப்தீரியாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வந்தது. இந்தியாவிலும் தடுப்பு மருந்து பயன்படுத்தப் பட்டு, முற்றிலும் அழிக்கப்பட்ட நோயாகவும் அறிவிக்கபட்டது.

கிருமிகள் பற்றியும்,, தடுப்பூசிகள் பற்றியும் உலகம் முழுவதும் மாற்றுக் கருத்து இருப்பது போலவே – டிப்தீரியத் தடுப்பூசிக்கும் எதிர்ப்பு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

1941 இல் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளரான டாக்டர். ஹண்டர் குழுவினர் கிருமிகள் என்ற கருத்தியலுக்கு எதிராக பல ஆய்வுகளை மேற்கொண்டனர். நோய்களுக்குக் காரணம் என்று கூறப்படும் கிருமிகளை நேரடியாகப் பிரித்தெடுத்து,  அவற்றை பல நுண்ணுயிரியல் நிபுணர்களின் உடலில் செலுத்தி தன்னுடைய ஆராய்ச்சியை நிரூபித்தார் டாக்டர் ஹண்டர். இதே போன்ற பல ஆய்வுகள் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் செய்யப்பட்டிருந்தாலும் கூட, டிப்தீரியா பிரச்சினையில் ஹண்டரின் ஆய்வுகள் மிகவும் முதன்மையானவை.

டிப்தீரியாவிற்கு காரணம் என்று நம்பப்பட்ட கிருமிகளை டாக்டர் ஹண்டர் தன் ஆய்வுக்கூட்த்தில் தனிமைப் படுத்தி வளர்த்தார். பல்கிப் பெருகிய இந்தக் கிருமிகளை பாலிலும், நீரிலும், உணவுகளிலும் கலந்து பலருக்கும் சாப்பிடக் கொடுத்தார். தொடர்ந்து பலமுறை கிருமிகளைக் கொடுத்த போதும் அவை யாரையுமே பாதிக்கவில்லை. அடுத்த கட்ட பரிசோதனையாக, சிலருடைய உள்நாக்கு, தொண்டை,  மூக்கின் உட்பகுதி போன்ற இடங்களில் டிப்தீரியக் கிருமிகளை நேரடியாகவே தடவி விட்டார். யாருக்கும் எந்த விளைவும் ஏற்படவில்லை.

கிருமிகள் நோயின் இரண்டாம் நிலையிலேயே தோன்றுகின்றன என்ற தன் ஆய்வில் வெற்றி பெற்றார் ஹண்டர். நம்முடைய உள் உறுப்புகளில் நம் முறையற்ற வாழ்க்கை முறையால் கழிவுகள் தேங்குகின்றன. இதனை வெளியேற்றுவதற்காக ஏற்படும் தொந்தரவுகளைத்தான் நாம் நோய் என்று அழைக்கிறோம். இந்த தொந்தரவுகள் ஏற்பட்ட பிறகுதான் நாம் பரிசோதனைகளைச் செய்து கொள்கிறோம். தேங்கிய கழிவுகளில் இருந்து உருவாவதுதான் கிருமிகள் என்பது தான் டாக்டர் ஹண்டரின் முடிவு.

என்வே தான் நோய்கு காரணமான கழிவுகளை உடலில் தேங்காமல் பார்த்துக் கொள்வதே – நிரந்தரத் தீர்வு எனவும், கழிவுகளில் இருந்து உருவாகும் கிருமிகளைக் கொல்வதால் உடலுக்கு தீமைதானே தவிர நன்மை இல்லை எனவும் கூறுகிறார் டாக்டர் ஹண்டர்.

இப்படி ஒரு மாற்று அறிவியல் இருக்கும் போது – கேரள அரசு நிர்வாகமும், ஊடகங்களும் வெறும் மதப்பிரச்சினையாக இதனைச் சுருக்குவது ஆபத்தாகவே முடியும். மருத்துவ ரீதியானவிரிவான விவாதங்களுக்கு இது வழி ஏற்படுத்தாமல், பிரச்சினையை திசை திருபவே உதவும்.

கேரளாவிற்கும், மரபுவழி மருத்துவங்களுக்குமான தொடர்பு வரலாற்று ரீதியானது. நம் நாட்டில் ஆங்கில மருத்துவம் பரவிய பிறகும், அதற்கு இணையான மருத்துவமாக கேரள மக்கள் ஆயுர்வேதத்தைப் பின்பற்றி வந்ததை யாரும் மறுக்க முடியாது. ஆயுர்வேதமும், ஹோமியோபதியும் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மாநிலங்களில் முதன்மையானது கேரளா.

டிப்தீரியப் பிரச்சினையை கேரள பாரம்பரியத்தோடு இணைத்துப் பார்க்கவும் அரசுகள் தயாராக இல்லை. “தடுப்பூசிக்கு எதிரான மூடநம்பிக்கை” என்ற ஒற்றை வரியைக் கொண்டு எல்லா விவாதங்களையும் புறந்தள்ளுகிறது அரசு.

கேரளஹோமியோபதி அமைப்பின் டாக்டர். முகமது ஜலீல் தடுப்பூசிகளை கடுமையாக விமர்சிக்கிறார். “ஏற்கனவே அழிக்கப் பட்டதாக்க் கூறுக் நோய்களுக்கு ஏன் இப்போது நாங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்?” என்ற கேள்வியை முன்வைக்கும் ஜலீல் கூறும் இன்னொரு விஷயம் இன்னும் முக்கியமானது. “விருப்பமானவர்களுக்கு தடுப்பூசி போடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், எங்கள் குழந்தைகளை பரிசோதனைக் கருவிகளாக்குவதை எங்களால் ஏற்க முடியாது”.

கேரளாவின் இயற்கை மருத்துவர்களில் ஒருவரான கோழிக்கோடு மருத்துவர் டாக்ட.பி.ஏ.கரீம் கூறும் போதும் ”தடுப்பூசிகள் அறிவியல் பூர்வமானவை அல்ல” என்பதை அழுத்தமாக முன்வைக்கிறார். ”அறிவியலில் எப்போதுமே இரு துருவங்கள் இருக்கும். அதில் பாதிப்பைக் கூறும் வாத்த்திற்கு முன்னுரிமை கொடுத்து ஆய்வு செய்வது அவசியம். டிப்தீரியா பிரச்சினையிலும் இரண்டு வாதங்கள் இருக்கின்றன. வணிக ரீதியான, நிர்வாக ரீதியான காரணங்களுக்காக எதிர் வாதங்களை மறுப்பது பாதிப்பிலேயே முடியும். அரசு என்ற மாபெரும் புயலை எதிர்த்து எங்களால் நிற்க முடியுமா என்பது தெரியாது. ஆனால், தடுப்பூசிகள் மனித உயிர்களுக்கு ஆபத்தானது என்பதை இயற்கை மருத்துவர்கள் எப்போதுமே உணர்ந்து தான் இருக்கிறார்கள்”.

இந்தியன் அக்குபங்சர் பிராக்டிஷனர்ஸ் அசோசியேசன் (ஐ.ஏ.பி.ஏ) அமைப்பின் செயலாளர் மருத்துவர் சுஹைப் ரியாலூ கூறுவது இன்னும் முக்கியமானது. “எங்கள் அமைப்பின் சார்பில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்தோம். டிப்தீரியா அறிகுறிகள் இருப்பதாக அட்மிட் செய்யப்பட்டிருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை – 12. அவர்கள் பெற்றோர்களிடத்தில் பேசும் போது ஒரு உண்மை வெளிப்படுகிறது. இதில் 9 பேர் முறையாக டிப்தீரியாவிற்கான தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். மூன்று குழந்தைகள் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு வந்த பாதிப்பை யாரும் ஆய்வு செய்யத் தயாராக இல்லை. இந்த விஷயமே வெளியில் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.”

மத அடிப்படையோ அல்லது மரபுவழி அறிவியல் அடிப்படியோ. . . எப்படியானாலும் தடுப்பூசியை மறுக்கும் உரிமை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இருக்கிறது. ஏனென்றால், அமெரிக்காவைப் போல – நம் நாட்டில் கட்டாயத்தடுப்பூசிச் சட்டம் இல்லை. அப்படி, கட்டாய தடுப்பூசி சட்டம் அமுலில் இருக்கும் அமெரிக்காவிலேயே  ஒரு தனிநபர் தடுப்பூசியை விரும்பவில்லை என்றால் அவரைக் கட்டாயப் படுத்துவதில்லை.

இந்தியா – ஒரு ஜனநாயக நாடு.

 

                                                                                                                                                                #