- அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக் -
தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை. நமது அரசுகள் கடும் முயற்சியில் தான் தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து தருவித்து, நம் மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றுகின்றன. இதனை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசுக்கு உதவி செய்ய வேண்டும். அரசு செய்வது எப்படி தவறானதாக இருக்கும்?
- இப்படி தடுப்பூசிக்கு ஆதரவாக சில ஆங்கில மருத்துவர்களும், அறிவு ஜீவிகளும் கருத்துகளை பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்கள். அவரவர் கருத்தினை பகிர்ந்து கொள்ளும் உரிமையை இந்திய அரசியல் சாசனம் அனைவருக்குமே வழங்கியிருக்கிறது. தடுப்பூசி பற்றி மட்டுமல்ல. . . அனைத்தைப் பற்றியும் ஒரு தனி மனிதனுடைய கருத்திற்கு முக்கியத்துவம் உண்டு. ஏனெனில் இந்தியா சர்வாதிகார நாடல்ல. ஜனநாயக நாடு.
தடுப்பூசிக்கு ஆதரவாகப் பேசுவதற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ, அதே அளவிற்கு தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் உரிமை உண்டு. ஆனால், ஆதரவானவை மட்டுமே கருத்து என்றும், எதிரானவை எல்லாம் வதந்தி என்றும் சொல்வதை விட்டு, விட்டு பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி, அதனைப் புரிந்து கொள்வது அவசியம்.
தடுப்பூசி எதற்காக?
தடுப்பூசிகள், தடுப்பு மருந்துகள் அனைத்தும் நோய் வருமுன் மக்களைக் காப்பதற்காக என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதனைப் பற்றிய சர்ச்சைகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே தொடர்ந்து வருகிறது. தடுப்பூசி ஒரு நபருக்கு செலுத்தப்படும் போது என்ன நிகழ்கிறது?
நோய்க்கு காரணமான கிருமியை தடுப்பூசி மூலம் உடலில் செலுத்துவதே தடுப்பு மருந்தின் அடிப்படையாகும். உதாரணமாக, மஞ்சள் காமாலை தடுப்பூசியில் அதற்குக் காரணமான ஹெபடைடிஸ் கிருமி இருக்கும். அதனை நமக்கு ஊசி மூலம் செலுத்துவார்கள். இப்படி செலுத்தப்படும் கிருமி உடலிற்குள் போகும் போது – நமது எதிர்ப்பு சக்தி செலுத்தப்பட்ட கிருமியைக் கண்டு பிடித்துக் கொல்லும். சரி, கிருமி உடனேயே செத்து விட்ட்தே – இது எப்படி நோய் வராமல் தடுக்கும்? இந்தப் போராட்ட்த்தில் ஒரு முறை கிருமியை அடையாளம் கண்டுகொள்ளும் எதிர்ப்பு சக்தி அதே கிருமி எப்போது உடலுக்குள் வந்தாலும் அழிக்கும் ஆற்றலைப் பெற்று விடும்.
இதெல்லாம் சரி தான். மரபு வழி மருத்துவர்களும், அறிவியலாளர்களும் கேட்கும் கேள்விக்கு வருவோம். முதல் முறையாக கிருமிகளையே பார்க்காத உடலில் இக்கிருமிகள் தடுப்பூசி வழியாக செலுத்தப் பட்ட போது எப்படி உடலின் எதிர்ப்பு சக்தி போராடியது? அடையாளம் தெரியாத கிருமிகளாக இருந்தாலும் உடலின் எதிர்ப்பு சக்தி இப்படித்தான் போராடும். அப்புறம் எதற்கு இந்த போராட்டப் பரிசோதனை? இது தவிர, அடிக்கடி இதே மாதிரி போராடுவதற்கு ஒத்திகை நடத்தி, நடத்தி எதிர்ப்பு சக்தியை வீணடித்துக் கொண்டிருந்தால் – உண்மையிலேயே நோய் தாக்கும் போது எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டால் . . . ?
இது மட்டுமல்ல பிரச்சினை. தடுப்பு மருந்தில் உண்மையிலேயே கிருமிகள் மட்டும் இருந்தால் நம் உடல் அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அழித்து விடும். ஆனால், இந்த நோய்க்கிருமிகளைப் பாதுகாப்பதற்காக பல வகையான ப்ரிசெர்வேடிவ்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவைகள் தான் முக்கியப் பிரச்சினையே.
உலகப் புகழ்பெற்ற திம்மர்சால் எனும் பாதரசம் தான் தடுப்பு மருந்துகளின் முதல் ப்ரிசர்வேடிவ். ஆனால், இது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நியூரோ டாக்சின் என்பது எல்லா விஞ்ஞானிகளுக்குமே தெரியும். சில தடுப்பு மருந்துகளில் திம்மர்சாலுக்கு பதிலாக அலுமியம், பார்மால்டிஹைட், HCG எனும் ஹார்மோன் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இந்த ஹார்மோன் பெண்கள் கருவுற்றிருக்கும் போது சிசுவை பாதுகாப்பதற்காகப் பயன்படும் ஹார்மோன் ஆகும். இதனை தடுப்பு மருந்தில் பயன்படுத்தும் போது விஷயம் இன்னும் சிக்கலாகிறது. ஹார்மோன் கலந்த தடுப்பூசியைப் பயன்படுத்தும் பெண்களுக்கு கரு தங்கும் வாய்ப்பு குறைந்து போகிறது.
தடுப்பூசிக்கும் – கருவுக்கும் என்ன சம்பந்தம்? HCG ஹார்மோன் கிருமிகளுடன் தடுப்பு மருந்தாக செலுத்தப்படும் போது கிருமிகளை எதிர்க்கும் ஃபார்முலாவை நம் எதிர்ப்பு சக்தி கண்டுபிடிப்பதைப் போலவே, இந்த HCG யையும் எதிர்த்து அழித்து விடும். ஏனெனில், உடலுக்கு வெளியில் இருந்து செலுத்தப்படும் அந்நியப் பொருட்களை நம் உடல் ஃபாரின் பாடியாகவே பார்க்கிறது. இப்படி ஒருமுறை HCG யை அழித்து நம் உடல் பழகி விட்டால் – பெண்ணின் உடலில் இயற்கையாக சிசு வளப்பிற்காக HCG உருவாகும் போதும் இந்த அழிப்பு நடவடிக்கை நடைபெற வாய்ப்புண்டு.
இவைகள் எல்லாம் தடுப்பு மருந்தில் உள்ள சிக்கல்கள். பல தனியார் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் தான் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கின்றன. எனவே, அவை பின்விளைவு பற்றிய ஆய்வுகளில் இறங்கத் தயாராக இல்லை. அது தவிர, தடுப்பூசிகள் பற்றிய ஆய்வுகளை எப்போதும் மேற்கொள்பவை அரசுகள் அல்ல. தனியார் நிறுவனங்கள் தான். இதன் ஆய்வு முடிவுகள் எப்படி இருக்கும் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
தடுப்பு மருந்தில் இருக்கும் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கட்டும். தடுப்பூசி போடப்பட்ட பிறகு ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகளும் ,முறையாக நடத்தப்படுவதில்லை. தமிழ்நாட்டிலேயா பல முறை இந்த பாதிப்பில் பல குழந்தைகள் இறந்திருக்கின்றன. 2008 மே மாதம் ஏழு மாவட்டங்களில் பத்துக் குழந்தைகள் இறந்த்தானாலும் சரி, அதற்கும் முன்பு அஸ்ஸாமில் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப் பட்ட போதும் சரி, 2002 ஆம் ஆண்டின் உ.பி.யில் நடந்த போலியோ முகாமில் 26 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்ட போதும் சரி – ஏன் இப்படி நடந்தது என்பதற்கான எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. தீர்வும் எட்டப்படவில்லை.
வழக்கம் போல நமது அரசுகள் பால் குடித்ததால் புரையேறி குழந்தை இறந்து விட்டது என்றோ, சொட்டு மருந்து போடப்பட்ட பின்பு ஐஸ்க்ரீம் சாப்பிட்டதால் உயிர் போய் விட்ட்து என்றோ கூறி விட்டு ஃபைலை மூடி விடுகிறார்கள். காய்ச்சல் இருக்கும் போது தடுப்பூசி போடக்கூடாது. சளிப் பிடித்திருக்கும் போது சொட்டு மருந்து கொடுக்கக் கூடாது என்று விதம் விதமான அறிவுரைகளை இறப்பு சம்பவங்களுக்குப் பின்பு அள்ளி வழங்குகிறார்கள். பேருந்து நிலையங்களிலும், பள்ளிகளிலும் குழந்தைகளைத் தேடித் தேடி மருந்து கொடுத்த போது இந்த அறிவுரைகளை எந்த மருத்துவரும் வழங்குவதில்லை.
அமெரிக்காவில் 32 தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. தன் குழந்தைக்கு இவற்றைகொடுக்க விரும்பவில்லை என்றால் எந்தக் கட்டாயமும் இல்லை. பெற்றோரிடம் இருந்து ஒரு கடிதம் பெற்றுக் கொண்டு விட்டு விடுவார்கள். அமெரிக்காவில் டாக்டர் வில்லியம் ட்ரெப்பிங் தலைமையில் தடுப்பூசி போட விரும்பாத பெற்றோர்கள் தனி அமைப்பாகவே இயங்குகிறார்கள். ஆனால், இந்தியாவில் தடுப்பு மருந்துகளுக்கு எதிராகப் பேசுவது வதந்தி. போட மாட்டேன் என்று சொல்வது குற்றம். பெற்றோர்கள் காவல் துறையால் மிரட்டப் படுக்கிறார்கள். போலீசின் உதவியோடு மருத்துவர்கள் நம் வீட்டு குழந்தைகளுக்கு ஊசி போடுகிறார்கள்.
அமெரிக்காவில் இருக்கும் தடுப்பூசி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களோ, நஷ்ட ஈடு வழங்கும் அமைப்புகளோ நம் நாட்டில் இல்லை. அதற்கான எந்த சட்டப் பாதுகாப்பும் இல்லை. தடுப்பு மருந்து கொடுக்கப் பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டால் யார் பொறுப்பு?
போலியோ, பெரியம்மை போன்ற நோய்களை தடுப்பூசிகள் அழித்து விட்டிருக்கிறதே என்று அமெரிக்க டாக்டர் வில்லியம் ட்ரெப்பிங்கிடம் கேட்டார்கள். அவரின் பதில் – இது அதிகப்படியான கற்பனை. உண்மை என்னவென்றால் 1953 க்குப் பிறகு போலியோவின் தாக்கம் இயற்கையாகவே குறைந்து விட்டது. ஆனால், 1957 இல் தால் போலியோ தடுப்பு மருந்து பிரச்சாரம் செய்யப்பட்டது. தடுப்பூசிகள் வந்த பிறகு, மூளை , தண்டு வட பாதிப்புகள் மிக அதிக அளவில் பெருகியுள்ளன. போலியோ மருந்தைக் கண்டுபிடித்த ஜோன்ஸ் சால்க் தன் மருந்தால் 3 இல் 2 பங்கு போலியோ அதிகரிப்பு ஏற்பட்டு விட்டதாக அறிவித்தார்.
தடுப்பு மருந்துகள் பற்றிய அடிப்படை ஃபார்முலாவில் இருந்து, சட்ட பாதுகாப்பற்ற நிலை வரை தடுப்பூசிகளில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. ஒரு அரசின் நிலையில் எல்லா ஆய்வுகளும் சாத்தியமில்லை. ஆனால், தடுப்பு மருந்துகளை தன் குழந்தைகளுக்கு செலுத்த விரும்பாத பெற்றோர்களை கட்டாயப் படுத்துவதை மட்டும் கைவிட முடியும்.
# இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவாரக இருந்த டாக்டர். ஜேக்கப் புலியேல் உ.பி. போலியோ சொட்டு மருந்து பாதிப்பு பற்றி கட்டுரை எழுதியுள்ளார். 2006 இல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 27000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் கூறுகிறது அக்கட்டுரை.
# ஒவ்வொரு ரசாயன மருந்திற்கும் நிச்சயமான பக்கவிளைவுகள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம். தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் பற்றி ஏன் யாரும் பேச மறுக்கிறார்கள்? ஒரு தடுப்பூசியின் பக்க விளைவாக சொல்லப்படுவது என்ன தெரியுமா? SIDS. அப்படி என்றால் (SUDDEN INFANT DEATH SYNDROM) குழந்தை திடீரென்று இறந்து விட வாய்ப்பு உண்டு என்று அர்த்தம். எந்த மருந்துக் கம்பெனியாவது இது குறித்து பெற்றோர்களிடம் பேசியிருக்கிறதா?
# தடுப்பூசி பாதிப்புகள் என்று பெற்றோர் கூறும் புகார்களை கண்டு கொள்ள வேண்டாம் என்றும், இந்த விளைவுகளுக்கும் தடுப்பூசிகளுக்கும் தொடர்பே இல்லை என்று கூறும்படியும் அமெரிக்க மருத்துவர்கள் சங்கம் அனுப்பிய சுற்ற்றிக்கையை அமெரிக்க ஊடகங்கள் அம்பலப்படுத்தின.
# அமெரிக்காவில் கக்குவான் இருமலில் இறப்பவர்களாண்டிற்கு பத்துப் பேர்தான். இதற்கான தடுப்பூசிக்குப் பிறகு, ஆண்டிற்கு 950 பேர் கக்குவான் இருமலால் இறக்கிறார்கள்.
# 2017, ஜனவரி 30 அன்று டெக்கான் கிரானிகிள் நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியில் விசாகப்பட்டினம் அருகே நடந்த போலியோ முகாமில் இறந்த குழந்தைகள் பற்றி இடம்பெற்றுள்ளது, இறப்பிற்கு இன்னும் காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.
பின்னிணைப்புகள்:
# தடுப்பூசி பற்றிய உண்மைகளை தன் கட்டுரை மூலம் வெளிப்படுத்துகிறார்
மருத்துவப் பேராசிரியரும், டாக்டருமான ஹெக்டே. இவர் மணிப்பால் மருத்துவப்
பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்
http://www.moneylife.in/article/vaccination-the-inside-story/24108.html
# மருத்துவம் மற்றும் அறிவியல் விளைவுகளுக்கான குழு, அமெரிக்காவின்
பெண்டாவேலண்டின் பின்விளைவுகள் பற்றிய கட்டுரைகள்
# மூளை பாதிப்பும், இறப்பும் தடுப்பூசிகளால் ஏற்படுவது சாதாரணம்
என்று கூறும் உலக மருத்துவர்களின் குரல்
# எந்த தடுப்பூசியில் என்ன பின்விளைவுகள் இருக்கின்றன என கூறும்
மருந்துக் கம்பெனிகளின் மெடிக்கல் லிட்ரேச்சர். . .
http://www.vaccinesafety.edu/package_inserts.htm
# தடுப்பு மருந்துகளும், குழந்தை மரணமும் பற்றி விளக்கும் வீடியோ. .
https://www.youtube.com/watch?v=iBth2bdlez0
# தடுப்பூசிகள் எவ்வாறு உடலைக் கெடுக்கின்றன என்பதை விளக்கும் மேலை நாட்டு மருத்துவர்களின் வீடியோக்கள்
https://www.youtube.com/watch?v=D8OdKM1Z1EM